தமிழகம்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் அமைச்சர் எஸ்பி வேலுமணி..!!

சென்னை : சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை அமைச்சர் எஸ்பி வேலுமணி போட்டுக் கொண்டார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையிலும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி போட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை அமைச்சர் எஸ்பி வேலுமணி போட்டுக் கொண்டார். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழையும் அவர் மருத்துவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருந்தார்.
கடந்த சில நாட்களாக துணை முதலமைச்சர், ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.