தமிழகம்
கோவைக்கு 81 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

கோவை:கோவைக்கு மூன்றாம் கட்டமாக 81 ஆயிரத்து 700 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கமும், வைரஸ் காரணமாக நிகழ்ந்த அடுத்தடுத்த மரணங்களும் தடுப்பூசி மீதான மக்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. கோவையில் முன் களப்பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதியில் இருந்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாவட்டத்தில் ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக 83 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 13 ஆயிரத்து 700 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்டமாக 77 ஆயிரத்து 300 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 4 ஆயிரத்து 400 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.
கோவைக்கு இதுவரையில் மூன்று கட்டங்களாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 800 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 18 ஆயிரத்து 100 கோவேக்ஸின் தடுப்பூசிகள் சோத்து 1 லட்சத்து 78 ஆயிரத்து 900 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 33 ஆயிரத்து 788 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 342 கோவேக்ஸின் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.