Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

10 ஆண்டுகளுக்கு பின் கேரளாவில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்

Vivegam News 3 weeks ago

கேரளா: கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

தமிழ் நாட்டின் அண்டை மாநிலமான கேரளம் ஆட்சி மாற்றத்தை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டுகளாக கேரளாவின் முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் இருந்து வருகிறார். மொத்தம் 140 தொகுதிகள் கொண்ட கேரளத்தில் ஆட்சியமைக்க 70 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாடுசுற்றுலா

இந்த நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி 97 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சிபிஐ(எம்) தலைமையான இடது ஜனநாயக முன்னணி 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு வங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களில் இடதுசாரிகள் ஆட்சியை இழந்த பிறகும், கேரளா மட்டுமே இடதுசாரிகட்சி ஆட்சியில் இருந்து. இதனாலேயே கேரளா இடதுசாரிகளின் 'கடைசி கோட்டை' என்று அழைக்கப்பட்டது.

கேரளத்தில் தற்போது சிபிஐ(எம்) தோற்றதினால் 1977-க்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இடதுசாரி அரசு இல்லாத நிலை உருவாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News