Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

21 அடி சிம்மஹாரூட வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

Vivegam News 3 days ago

ர்மபுரி: தர்மபுரி அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டபுஜ வராகி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோன்று தர்மபுரி அருகே இலக்கியம்பட்டி அழகாபுரியில் 21 அடி உயர ஸ்ரீ சிம்மஹாரூட வராகி அம்மன் சிலையுடன் அமைந்துள்ள கோவிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தர்மபுரி அருகே மொடக்கேரி கிராமத்தில் அமைந்துள்ள 16 அடி உயரமுள்ள மகாகாளி வராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News