Dailyhunt

அடுத்தகட்ட பொய் வாக்குறுதிகளுடன் ரெடியாகிவிட்டார் முதல்வர். விஜய் விமர்சனம்

Vivegam News 3 weeks ago

திருச்சி: அடுத்தகட்ட பொய் வாக்குறுதிகளுடன் ரெடியாகி விட்டார் முதல்வர் ஸ்டாலின் என்று தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

திமுக போல் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றாமல் தவெக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்றும் தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு முன்பு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:

கேஸ் பிரச்சனை எப்படி இருக்கிறது? பிரச்சனை சரி ஆகி விட்டதா? இதனால் எத்தனை பிரச்சனைகள்? சமையல் எரிவாயு இல்லாததால் எவ்வளவு டீ கடைகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் கேஸ் பிரச்சனை பெரிய அளவில் இல்லாமல் இருந்திருக்கும்.

ஸ்டாலின் சாரை கேட்டால் நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறுவார். இதற்காக டெல்லி சென்றிருக்கலாமே? கேஸ் மானியம், வேலைவாய்ப்பு, நீட் ரத்து இவை அனைத்தும் என்னாச்சு? இப்போது அடுத்தகட்ட பொய் வாக்குறுதிகளுடன் முதல்வர் ரெடியாகி விட்டார்.

பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றுவது தான் மு.க.ஸ்டாலினின் வேலை. திமுக போல் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றாமல் தவெக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்.

கல்வி, போக்குவரத்து, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளில் தான் எங்கள் கவனம் இருக்கும். கழிவறை இல்லாததால் காட்டுப்பக்கம் ஒதுங்கிய பள்ளி சிறுமியின் நிலை என்னாச்சு? திருச்சியில் ஒரு மந்திரி இருக்கிறார், நகராட்சி துறையில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி உள்ளார்.

நகராட்சி துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி லஞ்சம் பெற்று ஏமாற்றி உள்ளார் ஒரு அமைச்சர். கோடி கோடியாய் லஞ்சம் வாங்கும் இந்த அமைச்சர் உள்ளிட்ட திமுகவினரை தூக்கி எறிந்து விடுவோமா? 2000 கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு பணி வழங்குவோம் எனக்கூறினர் 5 பேருக்கு மட்டுமே பணி வழங்கினர். இவ்வாறு அவர் பிரச்சாரம் செய்து பேசினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News