Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

அசைவப்பிரியர்களுக்கு பிடித்தமான சிக்கன் வறுவல் செய்முறை

Vivegam News 58 mins ago

சைவப்பிரியர்களுக்கு சிக்கன் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும். அதை ஓட்டல் சுவையில் வீட்டிலேயே செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள்

சிக்கன் – அரை கிலோ
சோம்பு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 7
பூண்டு – 10 பல்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 5 ஸ்பூன்

செய்முறை: சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்து கொள்ளவும்.

மிக்ஸியில் காய்ந்த மிளகாய், சோம்பு, பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

கழுவி வைத்துள்ள சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அடுப்பை மிதமான தீயில் மூடிவைத்து வேக விடவும்.

தண்ணீர் முற்றிலும் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்கவும். சுவையான சிக்கன் வறுவல் ரெடி

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News