Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

படையப்பா படத்தின் தயாரிப்பாளருக்கு தங்க செயின் பரிசளித்த ரஜினி

Vivegam News 1 month ago

சென்னை: படையப்பா படத்தின் தயாரிப்பாளர் தேனப்பனை அழைத்து 5 பவுன் தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் ரஜினி.

1999ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, சிவாஜி , ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா நடிப்பில் வெளியான படம் ‘படையப்பா’. இப்படத்தை அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார் ரஜினி. இதில் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தவர் பி.எல்.தேனப்பன். தற்போது நடிகராகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு, ‘படையப்பா’ கடந்த ஆண்டின் இறுதியில் மறுவெளியீடு செய்யப்பட்டது. மறு வெளியீட்டிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நல்ல வசூலையும் கொடுத்தது.

இதனைக் கொண்டாடும் விதமாக தற்போது தேனப்பனை அழைத்து 5 பவுன் தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் ரஜினி. படத்தின் மறுவெளியீட்டை நடத்தி கொடுத்தது தேனப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News