Sunday, 26 Mar, 12.01 pm Vivegam News

வர்த்தகம்
படித்தது இஞ்சினியரிங்... பார்ப்பது இயற்கை விவசாயத்தில் ஓர் பசுமை புரட்சி..!

சென்னை: இஞ்சினியரிங் படிப்பை முடித்து அமெரிக்காவில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்தில் இறங்கி சாதணைகளை படைத்து வருகின்றனர் சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் அண்ணன் தம்பிகள்..

இயற்கை முறையில் விவசாயம் செய்து எவ்வித கலப்படமும் இல்லாத ஆர்கானிக் பொருட்களை பெருமளவில் விற்பனை செய்து வருகிறார் சென்னையை சேர்ந்த ஜெய் கணேஷ். இவரது ஆர்கானிக் Tapovana ஸ்டோர் மற்றும் பார்ம்ஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நமது விவேகம் செய்திக்களுக்காக இவரை சிறப்பு சந்திப்பு செய்தோம். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் உணவுப்பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் என்று அனைத்திலும் தற்போது ஆர்கானிக் பொருட்களின் உற்பத்தியும், உபயோகமும், ஏற்றுமதியும் உயர்ந்து கொண்டே வருகிறது. இப்படி வெளிநாட்டில் வால்மார்ட்டில் நம் நாட்டின் இயற்கை விவசாய பொருட்களை கண்டவுடன் ஏன் நாம் இதை நம் நாட்டிலேயே செய்ய கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

தாயகம் திரும்பி என் தந்தையுடன் கலந்து ஆலோசித்தேன். அப்போது அவர் இயற்கை விவசாயம் என்பது சாதாரண காரியமல்ல என்றார். தொடர்ந்து இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாழ்வாரிடம் பயிற்சி பெற்றேன். இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து அய்யா நம்மாழ்வார் அளித்த பயிற்சிகள் தான் எங்களின் வெற்றிக்கு காரணம். தொடர்ந்து சில ஏக்கரில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டேன். ஆரம்பக்காலத்தில் இதில் பெரியளவில் செய்ய முடியாத நிலை. அப்போது என் தந்தை படிப்பு மற்றும் அனுபவம் சேர்ந்தால்தான் இதில் வெற்றிப் பெற முடியும் என்று தக்க ஆலோசனைகள் கூறினார்.

முயற்சியே வெற்றியை தரும் என்பதை மனதில் கொண்டு முதலில் சில ஏக்கரில் மாம்பழம் சாகுபடி செய்தோம். இயற்கை முறையில் எவ்வித ரசாயன உரங்களும் இல்லாமல் சாகுபடி செய்யப்பட்ட மாம்பழங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தோம். இதன் சுவை மிகவும் அருமையாக இருந்ததால் அவர்கள் விற்பனை கேட்க... அப்போதுதான் ஆர்கானிக் பொருட்கள் விற்பனையை தொடங்கினோம்.

ஆர்கானிக் பொருட்களின் மீது மக்களின் பார்வை திரும்ப காரணம்...ரசாயன கலப்பு பொருட்களால் அதிகளவு நோய் பாதிப்புக்கு உள்ளானதுதான். இதற்காக சில பணிகள் மேற்கொண்டோம்.... சிலர் பருப்பு வகைகள், சிலர் பால் உற்பத்தி என தர தயாராக இருந்தனர். இதை ஒருங்கிணைத்து செயல்படுத்த POFA (Pasumai Organic Farmer Association) என்ற அமைப்பை உருவாக்கினோம்.

சிலர் இயற்கை விவசாயம் செய்ய விரும்புபவர். சிலர் காய்கறிகள் தர விரும்பினர். இப்படி இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அனைத்து ஆர்கானிக் பொருட்களையும் ஒரு சேர விற்பனைக்கு கொண்டு வருவதுதான் இந்த அமைப்பின் நோக்கம். தற்போது அது வெற்றியடைந்துள்ளது.

பால், அரிசி வகைகள், சிறு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், தின்பண்டங்கள் என சுத்தமான எவ்வித கலப்படமும் இல்லாத ஆர்கானிக் பொருட்களை தற்போது விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனிலும் விற்பனை உள்ளது. மக்களின் தேவையை அறிந்து மிகப்பெரிய அளவில் ஆர்கானிக் பொருட்களை தரமாக, நியாயமான விலையில் விற்பனை செய்கிறோம்.

தக்காளி, கொய்யா, மாங்காய், எலுமிச்சை, வாழைப்பழம், ஆரஞ்சு, தர்பூசணி, சுரைக்காய், சோளம், சிறுதானியங்கள், பாரம்பரியமிக்க அரிசி வகைகள், கம்பு, கொள்ளு, குதிரைவாலி அரிசி, பருப்பு வகைகள் என ஆர்கானிக் பொருட்கள் மக்களின் மனம் நிறைவடைய செய்யும் வகையில் உள்ளது.

நாங்கள் விற்பனை செய்யும் காய்கறிகள், பழங்கள், அரிசி, தேன், நெல்லிக்காய், காஸ்மெடிக் பொருட்கள், பழசாறுகள், தேங்காய் பால், நெல்லிக்காய் ஜீஸ், ஆர்கானிக் தின்பண்டங்கள் அனைத்து மக்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. ரசாயனப்பொருட்களின் நச்சுத்தன்மை இல்லை. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, இயற்கைக்கு இணக்கமான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இயற்கையான விதைகள், இயற்கையான உரங்கள் (மண்புழு உரம் போன்றவை) எரு, இயற்கை வேர் ஊக்குவிப்பான்கள் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லிகள் போன்றவையால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் என்பதால் இதன் இயற்கையான சத்துக்கள் மேலும் அதிகரிக்கின்றன. முதலில் சிறிய அளவில் தான் இதை தொடங்கினோம் தற்போது தமிழகத்தில், சென்னை, வேலூர், திண்டுக்கல் என பல பகுதிகளில் எங்கள் சேவை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கரங்கள் இணைந்தால் காரியங்கள் வெற்றியடையும் என்பதற்கு இணங்க இந்த ஆர்கானிக் தபோவன ஸ்டோர் மற்றும் பார்ம்ஸ் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஆன்லைன் மூலம் ரசாயன கலப்பில்லாத உணவு பொருட்களை உங்கள் இல்லம் தேடி வர http://www.organictapovana.com/ இந்த தளத்தில் புக்கிங்க் செய்யலாம்.

தொடர்புக்கு: +91 99625 76848

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Vivegam News
Top