வாஷிங்டன்: தடை விதிப்பு... ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் ராணுவ அதிகாரி ஹசன் ஷாவர்போர், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போராட்டக்காரர்களை கொல்வதற்கு அனுமதி அளித்தது தொடர்பாக ஹசன் ஷாவர்போர் மீது, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. அவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் முக்கிய தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க ஆளில்லா விமானம் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு நடுவில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

