Monday, 27 Mar, 8.00 am Vivegam News

வர்த்தகம்
இயற்கையே வாழ்க்கை... உடல்நலனே குறிக்கோள்... அசத்தும் இளைஞர்.!

சென்னை:உடலையே ரசாயன கிடங்காக மாற்றி புதிய புதிய நோய்களுக்கு என்ட்ரி கொடுத்து வந்த நமக்கு ரசாயன கலப்பில்லாத ஆர்கானிக் உணவுகள் பற்றிய மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் இயற்கை விவசாயி நம்மாழ்வார்.


பசுமை புரட்சி என்ற பெயரில் நம் பாரம்பரியமிக்க உணவுகளை மறந்தோம். நோய்களை வரவழைத்துக் கொண்டோம். பூமியை ரசாயனத்தால் குளிப்பாட்டி மலடாக்கினோம். இவற்றை மாற்ற பெரும் முயற்சிகள் மேற்கொண்டவர்தான் இயற்கை விஞ்ஞானி, விவசாயி நம்மாழ்வார். தமிழகம் முழுவதும் பல பிரசாரங்கள், கருத்தரங்குகள் நடத்தி இன்றைய மக்களை ஆர்கானிக் உணவுகள் பக்கம் திசை திருப்பி நம் பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுத்தவர்.


அவர் காட்டிய வழியில் இன்று சென்னையில் ஆர்கானிக் ஸ்டோர்ஸ் மற்றும் பார்ம்ஸ் ஆகியவற்றை சிறப்பாக நடத்தி மக்களின் இதயத்தில் அருமையான இடத்தை பிடித்துள்ளார் ஜெய்கணேஷ். வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை பார்த்தவர் இன்று ஆர்கானிக் ஸ்டோர் வைத்து மக்களின் உடல்நலனுக்காக சிறப்பான சேவையாற்றி வருகிறார்.


அவரிடம் விவேகம் செய்திகளுக்காக சிறப்பு சந்திப்பு நடத்தினோம். அப்போது அவர் கூறியதாவது:


நம் மண்ணையும், அதில் விளையும் பொன்னான பாரம்பரியமிக்க உணவு பொருட்களையும் ரசாயன கலப்பின்றி, மக்களுக்கு இயற்கை முறையில் விளைவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கொடுத்த தாக்கமே இந்த Tapovana ஸ்டோர் மற்றும் பார்ம்ஸ் உருவாக காரணம்.


இந்தியாவில் 50 கோடி டாலராக உள்ள 'ஆர்கானிக்' உணவு பொருட்கள் சந்தை வரும், 2020ல் 136 கோடி டாலர் மதிப்புமிக்கதாக வளர்ச்சி காணும்' என்று ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது.


ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றை பயன்படுத்தாமல், இயற்கை உரங்கள் மூலம் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் முறைக்குதான் 'ஆர்கானிக்' விவசாயம் என்று பெயர்.


இவ்வகை, இயற்கை விவசாயத்தில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள், உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானவை. அதே சமயம், இயற்கை விவசாயத்தில், உற்பத்தி குறைவாக உள்ளதால், இவ்வகை வேளாண் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். ரசாயன உரத்தால் உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு பின்னர் அதற்காக மருந்து, மாத்திரைகளுக்கு செலவிடும் தொகையை விட இது குறைவுதான்.


ஆர்கானிக் உணவுப் பொருட்களுக்கு, இந்தியா உட்பட, உலக நாடுகளில் தற்போது மவுசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் ஆர்கானிக் பொருட்கள் பற்றிய பெரும் விழிப்புணர்வுக்கு காரணம் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்தான். உலகளவில் 82 நாடுகளில், இயற்கை விவசாய ஒழுங்குமுறை சட்டங்கள் உள்ளன.இந்தியாவில் 100 சதவீதம் இயற்கை விவசாயம் நடைபெறும் முதல் மாநிலம் என்ற சிறப்பை, சிக்கிம் பெற்றுள்ளது. மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, மிசோரம், கேரளா உள்ளிட்ட, 13 மாநிலங்கள், முழுமையான இயற்கை விவசாயம் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகின்றன.


கடந்த, 2014 மார்ச் நிலவரப்படி இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படும் நிலப் பரப்பு 47.20 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இதில், 6.5 லட்சம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த, 2014ல், இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருட்களின் மதிப்பு, 36 கோடி டாலராக இருந்தது. தற்போது, 50 கோடி டாலராக உயர்ந்துள்ளது.


இயற்கை உணவுப் பொருட்கள் உற்பத்தியில், பருப்பு வகைகள் முதலிடத்திலும் அடுத்து நெல் உள்ளிட்ட உணவு தானியங்களும் உள்ளன. பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவே, இயற்கை விவசாயம் வளர்ச்சி கண்டு வருகிறது. மக்கள் மத்தியிலும் சிறப்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. Tapovana ஆர்கானிக் ஸ்டோர் மற்றும் பார்ம்ஸ் வாயிலாக சுத்தமான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள் உட்பட ஆர்கானிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


பால், பருப்பு, சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், தேன், கம்பு மாவு, திணை மாவு என்று அனைத்து பொருட்களும் சிறப்பான முறையில் மக்களின் உடல் நலன் கருதி விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும். லாபக் கண் கொண்டு பார்க்காமல் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்துடன் களமிறங்கி இன்று வெற்றிக்கனியை பறித்துள்ளோம். ஆன்லைன் விற்பனையிலும் மக்கள் எங்களுக்கு அமோக ஆதரவு தந்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தொடர்புக்கு: +91 99625 76848

Website : http://www.organictapovana.com

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Vivegam News
Top