Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

கம்பீரின் ஆலோசனை எனக்கு உதவியது: குர்பாஸ்

Vivegam News 1 day ago

மும்பை: தனது பேட்டிங் திறனை மேம்படுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீரின் ஆலோசனை பெரிதும் உதவியதாக ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. மழையால் 25 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்காக ரஹ்மதுல்லா குர்பாஸ் அபாரமாக விளையாடி சதமடித்தார். போட்டிக்குப் பிறகு பேசிய குர்பாஸ், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் பேசியது தனது ஆட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டிக்குப் பிறகு தனது ஷாட் தேர்வு முறையை மேம்படுத்த விரும்புவதாக கம்பீரிடம் கூறியதாகவும், அவர் வழங்கிய ஆலோசனைகளை பயிற்சியில் பின்பற்றியதாகவும் தெரிவித்தார். இதற்காக கம்பீருக்கு நன்றியுடன் இருப்பேன் என்றும் குர்பாஸ் கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News