Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க சீனா அனுமதி

கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க சீனா அனுமதி

Vivegam News 6 years ago

கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க சீனா அனுமதி


பீஜிங்: சீன அரசு அனுமதி... கொரோனாவுக்கு கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க சீன அரசு அனுமதி அளித்துள்ளது.


சீனாவில் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, ரஷியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 165 நாடுகளுக்குப் பரவியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,98,214 ஆக உயர்ந்துள்ளது.


சீனாவுக்கு அடுத்து கொரோனாவால் அதிகம் போ உயிரிழந்த நாடுகளில் பட்டியலில் இத்தாலி முதலில் உள்ளது.

கொரோனாவால் சீனாவில் 3,237, இத்தாலியில் 2,503, ஈரானில் 988, ஸ்பெயினில் 533 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.


இந்த நிலையில் கொரோனாவுக்கு கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க சீன அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்காவின் தேசிய சுகாதாரத்துறை நிறுவனம் நேற்றுமுன்தினம் தொடங்கிய நிலையில் தற்போது சீனாவும் தடுப்பு மருந்தை பரிசோதிக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News