Dailyhunt

மக்கள் ஆதரவு முழுமையாக ஒரு திசையில் உள்ளது.. கி.வீரமணி உறுதி

Vivegam News 2 weeks ago

ஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசனின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தலைமை வகித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுகவிற்கு மக்கள் ஆதரவு முழுமையாக உள்ளது என்றார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியதாவது: தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் 3 நாட்கள்தான் உள்ளன. மக்கள் யாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள். அதனால் இதைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. மக்கள் ஆதரவு முழுமையாக ஒரு திசையில் இருக்கிறது,

முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைத்த பாதை நேராக கோட்டைக்குச் செல்லும் பாதை. மக்களின் செல்வாக்கு என்ற பேராதரவோடு அவர் செல்கிறார். இதை மக்கள் மனநிலையை பார்த்தே கூறுகிறோம். அந்த உணர்விலேயே செல்கிறோம். மற்றவர்கள் கூறும் கருத்துகள் எல்லாம் வெறும் கனவுகள், கலைய வேண்டிய கனவுகள். அவை விரைவில் கலையும். இவ்வாறு அவர் கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News