Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

முதல் டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்

Vivegam News 2 days ago

மைக்கா: முதல் டி20 போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. கமிந்து மெண்டிஸ் 51 ரன்களும், குசால் மெண்டிஸ் 36 ரன்களும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் மற்றும் ஷமார் ஜோசப் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 148 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் 65 ரன்களும், பிராண்டன் கிங் 37 ரன்களும் எடுத்தனர்.

இதனால் 19.2 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது ஹோல்டருக்கு வழங்கப்பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News