Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் மீட்பு: சென்னை வந்ததும் உறவினர்கள் நெகிழ்ச்சி வரவேற்பு

Vivegam News 2 weeks ago

சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த 21 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினர்.

அவர்களை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள் வரவேற்ற நிலையில், உறவினர்கள் இனிப்புகள் வழங்கி நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலர் உயிரிழந்ததுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழர்களை மீட்கவும், அவர்களின் நிலையை கண்டறியவும் தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக தமிழக அமைச்சர்கள் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்து மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து காத்மாண்டுவில் இருந்து 21 தமிழர்களுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் டெல்லி சென்றடைந்தது. அங்கு தமிழக அமைச்சர்கள் அவர்களை வரவேற்றனர்.

பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட 21 தமிழர்களும் இரவு 11.15 மணியளவில் சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த், சரத்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மீட்கப்பட்டவர்கள் திருச்சி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் சென்னை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News