Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

ஓணம் ரேஸில் இணைந்த துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்'

Vivegam News 1 day ago

கேரளா: துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஐ அம் கேம்' திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகிறது.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படம் 'ஐ அம் கேம்'. 'ஆர்.டி.எக்ஸ்' படத்தை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர், கயாடு லோஹர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், ஓணம் வெளியீட்டை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தாண்டு ஓணம் பண்டிகையில் பிருத்விராஜின் 'கலிஃபா' மற்றும் நிவின் பாலியின் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News