Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சபாநாயகர் கரு ஐயசூரியாவை சந்தித்து கலந்துரையாடினார் சீன தூதுவர்

சபாநாயகர் கரு ஐயசூரியாவை சந்தித்து கலந்துரையாடினார் சீன தூதுவர்

Vivegam News 6 years ago

கொழும்பு: சீன தூதுவர் கலந்துரையாடல்... சபாநாயகர் கரு ஜயசூரியவை இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சுயூவான் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.


சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான நிலைமைகள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சீன அரசாங்கம், அதிகாரிகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து சீனத் தூதுவர், சபாநாயகருக்கு விளக்கமளித்தார்.


சீனா முகங்கொடுத்திருக்கும் சவாலைச் சமாளிக்க இந்நேரத்தில் நாடாளுமன்றம் சீனாவுடன் உறுதுணையாக நிற்கும் என்ற உறுதிமொழியை சபாநாயகர் சீனத்தூதுவருக்கு வழங்கினார்.

இதேவேளை, உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 563ஆக உயர்ந்துள்ளதுடன் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 28,256 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News