Monday, 16 Mar, 11.48 pm Vivegam News

முகப்பு
சீனாவில் நேற்று ஒரே நாளில் 14 பேர் பலி; கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பு

சீனாவில் நேற்று ஒரே நாளில் 14 பேர் பலி; கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பு


பெய்ஜிங்: சீனாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்தது. இதன் மூலம் சீனாவில் மட்டும் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,213 ஆக உயர்ந்துள்ளது.


இந்த தகவலை சீனாவின் தேசிய நல்வாழ்வுத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 16 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 80,860 ஆக உயர்ந்துள்ளது.


திங்கட்கிழமை முதல் பெய்ஜிங்கில் உள்ள வெளிநாட்டு பயணிகள் அனைவரையும், தங்கள் இருப்பிடங்களிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள சீன அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது சீனாவில் கரோனா பாதித்து 2,975 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


கவலைக்கிடம், கொரோனா பாதிப்பு, 80,860 பேர், சீனா.


Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Vivegam News
Top