Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

'சிக்மா' விழாவில் ஜேசன் சஞ்சய்க்கு சிரஞ்சீவி வாழ்த்து. "விஜய் போலவே இருக்கிறார்"!

Vivegam News 1 day ago

சென்னை: ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், 'சிக்மா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, ஜேசன் சஞ்சய்யை பாராட்டி பேசினார். குறிப்பாக, 1990-களின் தொடக்க காலத்தில் விஜய் எப்படி இருந்தாரோ, அதேபோன்ற தோற்றத்தை ஜேசன் சஞ்சய்யிடம் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஜேசன் சஞ்சய்யின் குடும்பத்தில் சினிமா சார்ந்த பின்னணி வலுவாக இருப்பதால், இயக்குநராக அவருக்கு இயல்பாகவே ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்தார்.

ஜேசன் சஞ்சய் தனது முதல் படமான 'சிக்மா' மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.

இதனிடையே 'சிக்மா' திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. படத்தின் இசை ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள 'சிக்மா ஸ்டைல்', 'அய்யய்யோ அம்மாடி', 'ரேஜ் ஆப் சிக்மா', 'சுலோச்சனா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகியுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News