Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

சுவையான மற்றும் சத்தான கார்ன் முட்டை சூப் செய்வது எப்படி?

Vivegam News 2 days ago

சென்னை: மக்காச்சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று நாம் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்த கூடிய சோளம், முட்டை சேர்த்து அருமையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மக்காச்சோளம் – 1 பெரியது
சோள மாவு – 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
பால் – 1 கப்
வெஜிடபிள் ஸ்டாக்கியூப் – 1
பட்டர் – 1 ஸ்பூன்
தண்ணீர் – 1/4 லிட்டர்
உப்பு, மிளகுப் பொடி – தேவைக்கேற்ப

அலங்கரிப்பதற்கு
வெங்காயத்தாள் – சிறிதளவு,
முட்டை – 2.

செய்முறை: வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். சோளத்தை வேக வைத்து ஆறியதும் உதிர்த்து கொள்ளவும். முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். ஒரு கைப்பிடி மக்கா சோளத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மீதியை மிக்ஸியில் அரைத்து, தண்ணீருடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாயை வைத்து பட்டரை போட்டு சூடானதும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அடுப்பைச் சிறு நெருப்பில் வைத்துக் கொண்டு, சோள மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். மாவுக்கலவை கட்டிப்படாமல் இருப்பதற்காக இரண்டு மேசைக்கரண்டி பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொண்ட பின்னர் அரைத்த சோளக் கலவையும், தனியாக எடுத்து வைத்த மக்கா சோளத்தையும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, மிளகுப் பொடி, உதிர்த்த வெஜிடபிள் ஸ்டாக்கியூப் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். சூப் நன்கு கொதித்தவுடன் அடித்த வைத்த முட்டையை சூப் கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட வேண்டும். மேலே நறுக்கப்பட்ட வெங்காயத்தைத் தூவி, சூடாகப் பரிமாறலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News