Dailyhunt

தவெக திருவிடைமருதூர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

Vivegam News 3 weeks ago

திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரபாகரன் திருவிடைமருதூர் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரகுமார் வட்டாட்சியர் சாந்த மீனா முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழக முழுவதும் வருகிற 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது தேர்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர் அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தஞ்சை கிழக்கு மாவட்ட இணை செயலாளர் பிரபாகரன் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார்.

இதையடுத்து இன்று திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தரகுமார் வட்டாட்சியர் சாந்தமீனா உள்ளிட்டோர் முன்னிலையில் வேப்பமனு தாக்கல் செய்தார். முன்னதாக திருவிடைமருதூர் தேரடியில் இருந்து 500க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களோடு ஊர்வலமாக வந்தார்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் அருகே 100 மீட்டர் தொலைவில் தொண்டர்கள் நிறுத்தப்பட்டு நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வந்த தவெக வேட்பாளர் பிரபாகரனுக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News