Dailyhunt

தவெகவிற்கு ஆதரவு அளிக்கப்படுமா? திருமாவளவன் கூறியது என்ன?

Vivegam News 1 week ago

சென்னை: "இதுவரை இடதுசாரிகள், விசிக இணைந்து பயணித்தோம். எதிர்காலத்திலும் முக்கிய அரசியல் முடிவை இணைந்தே எடுப்போம்.

இதுவரை விஜய் குறித்து சிந்திக்கவில்லை, பேசவும் இல்லை" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், விஜய் அழைத்தால் ஆலோசனை நடத்துவதாக சிபிஎம், சிபிஐ தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "இதுவரை இடதுசாரிகள், விசிக இணைந்து பயணித்தோம். எதிர்காலத்திலும் முக்கிய அரசியல் முடிவை இணைந்தே எடுப்போம். இதுவரை விஜய் குறித்து சிந்திக்கவில்லை, பேசவும் இல்லை" என தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News