Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

துல்கர் சல்மானின் 'ஐ எம் கேம்' ரிலீஸ்! "தமிழ் படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு தரும்"

Vivegam News 1 day ago

கேரளா: துல்கர் சல்மான் தயாரித்து நடித்துள்ள 'ஐ எம் கேம்' திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாகிறது.

நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், காயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற முன்வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான், இப்படம் தமிழ் படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் என்றார். இதில் ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்துள்ளதாகவும், தங்களது தயாரிப்பு நிறுவனத்தில் உருவான மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம் இதுவே என்றும் தெரிவித்தார்.

காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன், த்ரில்லர், கேமிங் என பல்வேறு அம்சங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News