Dailyhunt

உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.20.64 கோடி என வேட்புமனுவில் தகவல்

Vivegam News 3 weeks ago

சென்னை: உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.20.64 கோடி என்றும் தங்கம், வெள்ளி நகைகள் எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேட்புமனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

தற்போது இதுதொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. அதில், கடந்த 2024-25ஆம் நிதியாண்டில் உதயநிதியின் மொத்த வருமானம் 10.40 லட்ச ரூபாய் என்றும், மனைவி கிருத்திகா உதயநிதிக்கு 2.92 கோடி ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கையிலுள்ள ரொக்கத்தை பொறுத்தவரை உதயநிதி ரூ.50,000, கிருத்திகா ரூ.75,000 ரூபாய் ஆகும்.

உதயநிதியின் தனிப்பட்ட கடன் அல்லது முன்பண விவரங்களை பொறுத்தவரை ஸ்நோ அவுசிங் பிரைவேட் லிமிடெட் ரூ.10 கோடி, நடிகர் சங்க அறக்கட்டளை கடன் ரூ.1 கோடி என்றும், கிருத்திகாவிற்கு ஸ்நோ ஸ்போர்ட்ஸ் பிரமோஷன் ரூ.4.65 லட்சம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து உதயநிதி ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள டிஃபென்டர் கார், 23 லட்ச ரூபாய் மதிப்பிலான இன்னோவா கார் வைத்துள்ளார். இவரிடம் நகைகள் ஏதும் இல்லை. கிருத்திகாவிடம் 1.87 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய தங்க நகைகள் 1,600 கிராம் உள்ளது. ஒட்டுமொத்த அசையும் சொத்துகள் உதயநிதிக்கு 12 கோடி ரூபாயும், கிருத்திகாவிற்கு 13.25 கோடி ரூபாயும் இருப்பது தெரிய வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News