Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

வாகன கண்காணிப்பு கருவி (VLTD) ஆலோசனை

Vivegam News 2 days ago

சென்னை: வாகன கண்காணிப்பு கருவி (VLTD) பொருத்தும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் (Public Service Vehicles) AIS-140 VLTD பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், லாரி உரிமையாளர் சங்கங்கள், பள்ளி வாகன உரிமையாளர்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் VLTD சாதனங்களின் விலை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் தனியார் பயணிகள் வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு AIS-140 VLTD எனும் GPS வசதியுடன் கூடிய கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதில், வாகன உரிமையாளர்கள் பயனடையும் வகையில் VLTD சாதனங்களின் விலையை சீராகவும் மற்றும் நியாயமாகவும் நிர்ணயம் செய்திட உற்பத்தி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களின் பிரிதிநிதிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், VLTD தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் ,VLTD சாதனங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு மற்றும் AIS-140 திட்டத்தின் செயலாக்க நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் முன்னிலையில் AIS-140 VLTD சாதனங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்க முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News