Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

வராஹி அம்மன் கோவில்களில் வளர்பிறை பஞ்சமி சிறப்பு வழிபாடு

Vivegam News 3 days ago

ர்மபுரி: வளர்பிறை பஞ்சமியையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஷ்ட வராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு கணபதி பூஜை, வராகி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து ஸ்ரீ அஷ்ட வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News