Dailyhunt

வரலாற்றை மாற்றி எழுதிய விஜய். நடிகர் பாலகிருஷ்ணா பாராட்டு

Vivegam News 1 week ago

தராபாத்: நடிகர்கள் நினைத்தால் வரலாற்றை மாற்றி எழுத முடியும் என்று தவெக தலைவர் விஜய் வெற்றி குறித்து நடிகர் பாலகிருஷ்ணா கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகரும் தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான பாலகிருஷ்ணா, தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெகவின் அமோக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் எம்.ஜி.ஆர் அவர்களும், தெலுங்கு நாட்டில் என் தந்தையும், தெலுங்கு தேசத்தின் மூத்த தலைவருமான என்.டி.ஆர் அவர்களும், ஒரு நடிகர் மனது வைத்தால் வரலாற்றை மீண்டும் எழுத முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

அந்த வெற்றியை மீண்டும் நினைவுகூர்ந்த சகோதரர் விஜய்க்கு எனது வாழ்த்துகள். தமிழ் மக்கள் விஜய் மீது வைத்துள்ள நம்பிக்கையை அவரது அரசியல் வாழ்க்கை நிறைவேற்றும் ” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்ற பாஜக மற்றும் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளுக்கும் பாலகிருஷ்ணா வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தலைமையில் மட்டுமே ஒரு புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News