Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

வீட்டிலேயே எளிய முறையில் ஹேர் கண்டிஷனர் செய்யும் விதம்

Vivegam News 3 weeks ago

வீட்டிலேயே ஹேர் கண்டிஷனர் செய்யலாம். பணத்தையும் மிச்சப்படுத்தலாம். கூந்தல் மினுமினுப்பாக இருக்க வேண்டும் என்று பெண்கள் ஏராளமாக பணம் செலவழித்து, கண்டிஷனர் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய கண்டிஷனரை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

தேங்காய் பால்- ½ கப்
வெந்தயம்- 1 ஸ்பூன்
நல்லெண்ணெய்- 1 ஸ்பூன்

செய்முறை: வெந்தயத்தினை லேசாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். இந்தப் பொடியினை தேங்காய் பாலில் போட்டு 15 நிமிடங்களுக்கும் குறையாமல் ஊற வைக்கவும். அடுத்து நல்லெண்ணெய் ஊற்றி பேஸ்ட்டினை நன்கு அடித்துக் கொள்ளவும்.

இந்த கண்டிஷனரை தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊறவைத்து, சீயக்காய் கொண்டு முடியை அலசினால் கூந்தல் மினுமினுவென்று மின்னும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News