Dailyhunt
108 தொகுதிகளில் தவெக முன்னிலை!.. முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை!..

108 தொகுதிகளில் தவெக முன்னிலை!.. முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை!..

Webdunia 4 days ago
டிகர் விஜய் 2 வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்தார்.
தமிழக அரசியல் இதுவரை திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேயான போட்டியாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில் விஜய் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். ஆரம்பம் முதலே தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என பேச துவங்கினார் விஜய். இது இளைஞர்களிடமும், புதிய வாக்களர்களிடமும், மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.


இந்நிலையில்தான், தமிழகத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவாக வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. தற்போதைய நிலவரப்படி தவெக 107 தொகுதிகளிலும், அதிமுக 64 தொகுதிகளிலும், திமுக 60 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி தேவை என்கிற நிலையில் விஜயின் தவெக 107 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. ஆட்சி அமைக்க இன்னும் 11 தொகுதிகளில் தவெக வெற்றிபெற வேண்டும். ஒருவேளை ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கிடைக்காமல் போனால் அதிமுக உதவியோடு தவெக ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது.


இந்நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் தனது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்யசாமி உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டுள்ளனர்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil