Dailyhunt
20 வருடங்களில் முதல்முறை!.. ஈரான் போரில் பல விமானங்களை இழந்த அமெரிக்கா!....

20 வருடங்களில் முதல்முறை!.. ஈரான் போரில் பல விமானங்களை இழந்த அமெரிக்கா!....

Webdunia 1 week ago
ரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது என சொல்லி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் துவங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேல் நடந்து வருகிறது.
இதில் ஈரான், இஸ்ரேல் இரண்டு நாடுகளிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது.

ஈரான் பணிந்து போய்விடும்... அந்த நாட்டில் இருக்கும் எண்ணெய் வளங்களை எடுத்துக் கொள்ளலாம் என அமெரிக்கா கணக்குப்போட்டது. ஆனால், அமெரிக்கா நினைத்ததற்கு மாறாக ஈரான் திருப்பி தாக்க துவங்கியது. அதிலும் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா ஈரான் போரில் பல முக்கிய விமானங்களை இழந்திருக்கிறது. அமெரிக்காவின் F15 மற்றும் A10 ரக விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியிருக்கிறது..

ஈரானுடன் நடந்த போரில் 6 ஜெட் போர் விமானம் உள்ளிட்ட 33 விமானங்களை அமெரிக்கா இழந்திருக்கிறது. அதே நேரம் ஈரான் 51 ராணுவ விமானங்களை இழந்திருக்கிறது. 7 விமானங்கள் நேரடி போர் மோதலில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மீதமுள்ளவை தரையில் அல்லது தாக்குதல்களில் அழிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதேபோல் ஈரான் கடற்படையும் கடும் சேதத்தை சந்தித்துள்ளாத செய்திகள் வெளியாகியிருக்கிறது. மொத்தம் 27 கப்பல்கள் தாக்கப்பட்ட நிலையில், அதில் 14 கப்பல்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது..
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil