Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
2021-ல் ஸ்டாலின் பதவியேற்ற அதேநாளில் பதவியேற்கும் விஜய்!.. எல்லாம் பிளானா?!..

2021-ல் ஸ்டாலின் பதவியேற்ற அதேநாளில் பதவியேற்கும் விஜய்!.. எல்லாம் பிளானா?!..

Webdunia 2 weeks ago
ரசியல் கட்சி துவங்கியது முதலில் திமுகவை மட்டுமே குறி வைத்து பேசி வந்தார் விஜய். அதுவும் கரூர் சம்பவத்திற்கு பின் திமுக மீதான விஜயின் கோபம் பலமடங்கு அதிகரித்து விட்டது..
திமுக ஏதோ சதி செய்து தன் மீது பழி சுமத்திவிட்டது என விஜய் நம்பினார். அந்த கோபத்தில்தான் திமுகவை 'தீய சக்தி' என கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்,

மேலும், தனக்கு திமுக பல வழிகளிலும் தொல்லை கொடுக்கிறது என விஜய் நம்பினார். குறிப்பாக பொதுக்கூட்டங்களுக்கும், பிரச்சாரங்களுக்கும் காவல்துறை அனுமதி கொடுக்காத போது அதற்கு பின்னணியில் திமுக இருப்பதாகவே விஜய் உறுதியாக நம்பினார். இதை பல மேடைகளிலும் அவரே சொல்லியிருக்கிறார்..


தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று விஜய் முதல்வராக பதவியேற்கவுள்ளார். நாளை காலை 11.30 மணிக்கு விஜய்க்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவெனில் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று சரியாக மே 7 தேதிதான் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார்.


தற்போது 5 வருடங்கள் கழித்து அதே தேதியில் விஜய் முதல்வராக பதவியேற்கிறார். ஆளுநருக்கு எழுதிய கடிதத்திலும் மே 7ம் தேதி பதவியேற்பு விழாவை நடத்துமாறு விஜய் கோரிக்கையும் வைத்திருந்தார். இது முக ஸ்டாலினை மனதில் வைத்துதானா என்பதுதான் இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil