கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப் பட ஹீரோ யஷ் நடித்து கடந்த 26ம் தேதி வெளியான திரைப்படம் டாக்சிக்.
ஆனால் படத்தை பார்த்த போது ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது. படத்தில் கதை இல்லை. திரைக்கதை நன்றாக இல்லை.. படத்தின் காட்சிகளில் ஒன்ற முடியவில்லை என்றெல்லாம் பலரும் கூறினார்கள்..
முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் காரணமாக இந்தியாவில் 100 கோடி வசூலை பெற்ற டாக்சிக், நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைந்தது. தற்போது படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் டாக்சிக் திரைப்படம் இந்தியாவில் 214 கோடியும், உலகம் முழுவதும் சேர்த்து 285 கோடியும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அனேகமாக இன்று டாக்சிக் திரைப்படத்தின் மொத்த வசூல் 300 கோடியை கடந்து விடும் என்கிறார்கள். அதேநேரம் இனி போகப்போக வசூல் மிகவும் குறையும் என்பதால் டாக்சிக் படம் 400 கோடியை கூட தொட வாய்ப்பில்லை என சிலர் கூறுகிறார்கள். டாக்சிக் படத்தின் பட்ஜெட் 400 முதல் 500 கோடி வரை என சொல்லப்படும் நிலையில் இந்த படம் தயாரிப்பாளருக்கும், யஷ்ஷுக்கும் ஒரு வெற்றிப் படமாக அமையுமா? இல்லையா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

