Dailyhunt
5 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.2500.. பேச்சுலர்கள் கடும் அதிர்ச்சி..!

5 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.2500.. பேச்சுலர்கள் கடும் அதிர்ச்சி..!

Webdunia 1 week ago

ரான் - அமெரிக்க போர் காரணமாக நிலவும் சர்வதேச எரிவாயு நெருக்கடியால், இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் 5 கிலோ எடையுள்ள 'சோட்டு' சிலிண்டர்களின் விலை தற்போது விண்ணை தொட்டுள்ளது.

சந்தையில் 1 கிலோ எரிவாயுவின் விலை ரூ. 400 முதல் ரூ. 500 வரை விற்கப்படுகிறது. அதாவது, ஒரு சிறிய 5 கிலோ சிலிண்டரை நிரப்ப ரூ. 2,500 வரை செலவிட வேண்டியுள்ளது.

வழக்கமாக 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் கருப்புச் சந்தையில் ரூ. 5,000 வரை விற்பனையாவதே இதற்கு முக்கிய காரணம். அதிகாரப்பூர்வ விலை ரூ. 914 ஆக இருக்கும் நிலையில், தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி 7 மடங்கு அதிக விலைக்கு எரிவாயு விற்கப்படுவது சாமானியர்களை பெரிதும் பாதித்துள்ளது.

"பெயர்தான் சோட்டு, ஆனால் விலையில் இது இப்போது 'Big Daddy' ஆகிவிட்டது" எனப் பயனாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Edited by Siva

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil