Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
9 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம்..  அதிரடி உத்தரவு..!

9 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம்.. அதிரடி உத்தரவு..!

Webdunia 1 week ago

மிழகத்தில் நிர்வாக வசதிக்காக 9 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ ஆணையை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் வெளியிட்டுள்ளார்.

இந்த மாற்றத்தின்படி, வேலூர் சரக டிஐஜியாக இருந்த ஜி. தர்மராஜன், சென்னை நுண்ணறிவுப் பிரிவு (பாதுகாப்பு) டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த பாக்கர்லா செபாஸ் கல்யாண், நுண்ணறிவுப் பிரிவு (உள் பாதுகாப்பு) டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி சரக டிஐஜியாக இருந்த பி. சரவணன், சென்னை சிஐடி நுண்ணறிவுப் பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களும் பெருமளவில் மாற்றப்பட்டுள்ளனர்.

திருவாரூர் எஸ்பி கராட் கருண் உத்தவ்ராவ், சென்னை ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு எஸ்பியாகவும், தென்காசி எஸ்பி ஏ. மயில்வாகனன், சென்னை சிபிசிஐடி எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்பி சி. மாதன், பாதுகாப்புப் பிரிவு சிஐடி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், 'க்யூ' பிரிவு எஸ்பியாக இருந்த கே. சண்முகம் சிபிசிஐடி எஸ்பி-2 ஆகவும், சென்னை குற்றப்பிரிவு எஸ்பியாக இருந்த ஜி.எஸ். மாதவன் பாதுகாப்புப் பிரிவு சிஐடி எஸ்பி-2 ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சட்டம் ஒழுங்கு ஏஐஜியாக இருந்த என். சிலம்பரசன், சிபிசிஐடி சிறப்புப் பிரிவு எஸ்பியாகப் பொறுப்பேற்க உள்ளார். இந்த அதிரடி இடமாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், புதிய பொறுப்புகளை அதிகாரிகள் விரைந்து ஏற்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய மாற்றங்கள் காவல்துறை நிர்வாகத்தில் புதிய வேகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil