Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆட்சி அமைப்பது எப்படி?.. நிர்வாகிகள், எம்.எல்.ஏக்களுடன் விஜய் ஆலோசனை!...

ஆட்சி அமைப்பது எப்படி?.. நிர்வாகிகள், எம்.எல்.ஏக்களுடன் விஜய் ஆலோசனை!...

Webdunia 2 weeks ago
2026 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை எண்ணப்பட்டது. துவக்கம் முதலே விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வந்தது.
இறுதியில் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திமுக 75 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆட்சி அமைப்பதற்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும் என்கிற நிலையில் தவெகவுக்கு இருக்கிறது. அதாவது இன்னும் 10 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறார்கள்..

எனவே மற்ற கட்சிகளில் இருந்து எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய நிலையில் தவெக இருக்கிறது. அநேகமாக காங்கிரஸிடமிருந்து 5 எம்.எல்.ஏக்கள், விடுதலை சிறுத்தை கட்சியிடமிருந்து 2 மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து மீதி எம்எல்ஏக்களை பெற்று ஆட்சி அமைக்க தவெக முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஆனால் இப்போது வரை நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என அந்த கட்சிகள் சொல்கிறது

. ஒருபக்கம் அதிமுகவிடமிருந்து ஆதரவை பெற்று விஜய் ஆட்சி அமைப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது..

இந்நிலையில், தவெக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் தற்போது பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை செய்து வருகிறார். ஆட்சி அமைப்பதற்தான அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil