Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆலங்குளம் அரிவாள் வெட்டு!.. சைக்கோ கும்பலின் அதிர்ச்சி பின்னணி!..

ஆலங்குளம் அரிவாள் வெட்டு!.. சைக்கோ கும்பலின் அதிர்ச்சி பின்னணி!..

Webdunia 12 hrs ago
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்துள்ள நெட்டூர் மாதா கோவில் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த சிலரை இருசக்கர வாகனங்கள் வந்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது.
அதில் ஏழு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிசிடிவி கேமரா பதிவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சேரன்மகாதேவி அருகே இன்று காலை 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்பின் மூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில்தான் ஆலங்குளம் மற்றும் மானூர் பகுதிகளில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த இந்த கும்பலை பற்றிய பகீர் தகவல் வெளியே தெரிய வந்திருக்கிறது. இந்த கும்பல்தான் நேற்று முன்தினம் பிரம்மதேசம் பகுதியில் பைக்கில் சென்றவரை வெட்டி பண பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


அவரிடம் பணம் இல்லாததால் வாகைக்குளம் சிற்ப தொழிற்கூடத்தையும் அடித்து நொறுக்கி பணத்தை பறித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகத்தான் ஆலங்குளத்தில் திருமண பேனர் முன்விரோதம் காரணமாக அங்கும் சிலரை வெட்டியது தெரியவந்துள்ளது. மானூரில் சாலையில் நடந்து கொண்டிருந்த சிலரையும் இவர்கள் வெட்டியிருக்கிறார்கள்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil