Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய CEO சம்பளம் ரூ.551 கோடி.. பழைய  CEO டிம் குக் சம்பளம் எவ்வளவு?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய CEO சம்பளம் ரூ.551 கோடி.. பழைய CEO டிம் குக் சம்பளம் எவ்வளவு?

Webdunia 2 weeks ago

ப்பிள் நிறுவனத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நீண்ட காலமாக தலைமை செயல் அதிகாரியாக இருந்த டிம் குக் பதவி விலகிய நிலையில், ஜான் டெர்னஸ் புதிய CEO-வாக பொறுப்பேற்றுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் வழங்கப்பட உள்ள புதிய சம்பள மற்றும் பங்கு ஊக்கத்தொகை விவரங்களை ஆப்பிள் வெளியிட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் ஜான் டெர்னஸின் இலக்கு ஊதியம் சுமார் 58 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.551 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 மில்லியன் டாலர் சம்பளமாகவும், சுமார் 55 மில்லியன் டாலர் பங்கு விருதுகளாகவும் இருக்கும். மேலும், 2026 நிதியாண்டுக்காக சுமார் 2.5 மில்லியன் டாலர் மதிப்பிலான RSU பங்குகளும் அவருக்கு கிடைக்கும்.

மறுபுறம், தற்போது Executive Chairman பொறுப்பை ஏற்றுள்ள டிம் குக்கின் இலக்கு ஊதியம் சுமார் 47 மில்லியன் டாலர், அதாவது ரூ.446 கோடி. இதில் 2 மில்லியன் டாலர் சம்பளமும், 45 மில்லியன் டாலர் பங்கு விருதுகளும் அடங்கும்.

கடந்த 2025-ம் ஆண்டில் CEO-வாக இருந்தபோது டிம் குக் சுமார் 74.3 மில்லியன் டாலர் பெற்றிருந்தார். எனவே புதிய பதவியில் அவரது ஊதியம் கணிசமாக குறைந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலையும், செயல்பாடுகளும் இந்த பங்கு விருதுகளின் மதிப்பை தீர்மானிக்கும். ஸ்டீவ் ஜாப்ஸுக்குப் பிறகு 2011-ல் CEO ஆன டிம் குக்கின் 15 ஆண்டு தலைமையின் பின்னர், தற்போது ஜான் டெர்னஸ் கையில் ஆப்பிளின் எதிர்காலம் சென்றுள்ளது.

Edited by Siva

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil