Dailyhunt
ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு பரீசலனை நிறுத்தம்!.. காரணம் என்ன?..

ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு பரீசலனை நிறுத்தம்!.. காரணம் என்ன?..

Webdunia 3 weeks ago
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா. இவர் ஒரு தொழில் அதிபர். தன்னுடைய மனைவியின் பெயரிலும் தன்னுடைய பெயரிலும் பல நிறுவனங்களை தொடங்கினார்..
அதேபோல் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு பணிபுரியும் நிறுவனத்தையும் இவர் நடத்தி வந்தார்.. திமுகவுக்காகவும் இவர் வேலை செய்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் தன்னை விடுதலை சிறுத்தை கட்சியில் இணைத்துக் கொண்டார். அந்த கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும் ஆதவ் அர்ஜுனா இருந்தார். ஆனால் திமுகவை விமர்சித்ததால் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் ஆதவ் அர்ஜுனா தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டு ஜயின் வலதுகரமாக மாறினார். விஜய்க்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பது, பிரச்சாரத் திட்டம் வகுப்பது, தவெக சார்பில் செய்தியாளர்களை சந்திப்பது போன்ற போன்ற எல்லாவற்றையும் செய்து வருகிறார்..

ஆதவ் அர்ஜுனா சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரின் வேட்பு மனு பரீசலனை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆதவ் அர்ஜுனா தனது நிறுவனங்கள் பலவற்றை மறைத்துள்ளதால் அவரின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சைகள் வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதன் காரணமாக ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தப்பட்ட்டது.

ஆதவ் அர்ஜுனா தனது மனைவி தொடர்புடைய 35 நிறுவனங்களை மறைத்ததாக சுயேட்சை வேட்பாளர் கூறுகிறார்கள்.. மேலும் ஆதவ் அர்ஜுனே வங்கி வைப்பு தொகை வருமானத்தை வேட்புமனுவில் மறைத்து விட்டதாக அவர்கள் கூறினார்கள். இதன் காரணமாக வேட்பு மனு பரிசீலனை நிறுத்தப்பட்டது. அதேநேரம் சிறிதுநேரத்தில் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil