Dailyhunt
ஆதவ் அர்ஜுனாவின் கார் ஏறி இறங்கியதில் காவலர் கால் முறிவு!.. திருச்சியில் பரபரப்பு!..

ஆதவ் அர்ஜுனாவின் கார் ஏறி இறங்கியதில் காவலர் கால் முறிவு!.. திருச்சியில் பரபரப்பு!..

Webdunia 2 weeks ago
டிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறார்..
ஏற்கனவே சென்னையில் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதியில் அவர் பிரச்சாரம் செய்தார்..

இந்நிலையில், இன்று காலை அவர் திருச்சி சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.. ஏனெனில் சென்னை பெரம்பூர் தொகுதி மட்டுமல்லாமல் திருச்சி கிழக்கு தொகுதியிலும் அவர் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் முடித்துவிட்டு போலீசார் அனுமதி கொடுத்திருந்த இடத்தில் விஜய் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்..



தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விஜய் எங்கு சென்றாலும் அவருடன் செல்கிறார்.. இந்த நிலையில்தான் விஜய் திருச்சிக்கு பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு சென்ற போது அவருக்கு பின்னால் வந்த ஆதவ் அர்ஜுனாவின் கார் பணியில் இருந்த ஒரு காவலரின் கால் மீது ஏறி இறங்கியது.. இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.. இதையடுத்து அந்த காவலர் வழியால் துடித்தார். தவெகவிடனர் அவரை அங்கிருந்து தூக்கிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..

ஆதவ் அர்ஜுனா விஜயின் பிரச்சார வாகனத்தில் இருந்திருக்கிறார்.. எனவே ஓட்டுனர் மட்டும் காரை எடுத்துச் சென்றபோதுதான் இந்த விபத்து நடந்தது தெரிய வந்திருக்கிறது..
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil