கோலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். அமராவதி படம் தொடங்கி தற்போது வரை 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அஜித்குமார் நடித்து விட்டார்.
தற்போதைய முதல்வர் விஜய் நடிகராக இருந்தபோது அவருக்கு போட்டி நடிகராக வலம் வந்தார்.
விஜயை அடுத்து அஜித்துக்கு அதிக ரசிகர்களும் இருக்கிறார்கள். ஒரு பக்கம் சினிமா மட்டுமல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சூடும் போட்டியில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது என்ன அஜித்துக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே அஜித் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில்தான், அஜித்தின் தாயார் மோகினி இன்று காலமானார். அவருக்கு வயது 84. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக சொல்லப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் மரணமடைந்தார். இந்நிலையில், தற்போது அவரது வீட்டில் மற்றொரு சோக சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
அஜித்குமாரின் தாயாரின் மரணத்திற்கு திரையுலக சேர்ந்தவர்களும், ரசிகர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்..