Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா?.. 12 மணிக்கு தீர்ப்பு...

அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா?.. 12 மணிக்கு தீர்ப்பு...

Webdunia 9 hrs ago
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் இருந்தபோது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுப்பது, புதுப்பிப்பது போன்றவற்றுக்கு ஒரு வருடத்திலேயே ரூ.400 கோடிக்கும் மேல் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
இதை எடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே சில முறை ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தற்போது வரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை..

அன்பில் மகேஷ் கடந்த 16 நாட்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், இடையில் மூன்று நாட்கள் அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஒருபக்கம், ஜாமீன் மனு தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு அன்பில் மகேஷின் ஜாமீன் மனு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகவிருக்கிறது. எனவே, அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது இன்று மதியம் 12 மணிக்கு தெரிந்து விடும்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil