Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அங்கதான் ஸ்டார்ட் ஆச்சி!.. முதல்வர் விஜய்க்கு இயக்குனர் விஜய் கொடுத்த பரிசு..

அங்கதான் ஸ்டார்ட் ஆச்சி!.. முதல்வர் விஜய்க்கு இயக்குனர் விஜய் கொடுத்த பரிசு..

Webdunia 1 week ago
டிகராக இருந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருப்பவர் விஜய். அரசியலுக்கு வர வேண்டும், முதல்வராக வேண்டும் என்பது விஜய்க்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த எண்ணம் இல்லை.
25 வருடங்களுக்கு முன்பே விஜய் அதை முடிவு செய்தார். அதனால்தான் விஜயின் ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக மாறியது.

விஜயின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளாக மாறினார்கள். கடந்த பல வருடங்களாக விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் வருவது என முடிவெடுத்து வந்துவிட்டார். தற்பொழுது தமிழகத்தின் முதலமைச்சராகவும் அவர் மாறிவிட்டார். இது திரைத்துறையில் பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. எனவே, விஜயை நேரில் சந்தித்து அவர்கள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

இந்நிலையில்தான், விஜய் வைத்து தலைவா படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய் முதலமைச்சர் விஜயை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தலைவா படத்தின் போஸ்டரில் Time to Lead என்கிற கேப்ஷன் இடம் பெற்றிருந்தது. இது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்த இரண்டு நாட்கள் படத்தை நிறுத்திவிட்டார்.



அதன்பின் வெளியான இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. இந்நிலையில்தான் அந்த படத்திற்காக உருவாக்கப்பட்ட போஸ்டரையே Time to Lead கேப்ஷனோடு புகைப்படமாக முதல்வர் விஜய்க்கு இயக்குனர் ஏ.எல்.விஜய் பரிசாக கொடுத்திருக்கிறார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil