தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. மற்ற நடிகர்களைப் போல எனக்கு அழகான கதாநாயகி வேண்டும், ஐந்து பாடல்கள் வேண்டும், நான்கு சண்டை காட்சிகள் வேண்டும், பன்ச் வசனம் பேச வேண்டும் என்றெல்லாம் இயக்குனரிடம் அடம் பிடிக்காமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, அதில் தனது இயல்பான நடிப்பில் மூலம் ஸ்கோர் செய்து வருகிறார்.
இந்நிலையில்தன், வெற்றிமாறன் அடுத்து இயக்கவுள்ள படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே வெற்றிமாறன் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை, விடுதலை 2 ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். அதேபோல் தற்போது சிம்புவை அவர் இயக்கி வரும் அரசன் படத்திலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். தற்போது வெற்றிமாறன் அரசன் படத்தை மட்டுமல்லாமல் கென் கருணாசை வைத்து ராஜன் வகையறா என்கிற படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்த இரண்டு படமும் முடிந்ததும் அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம். இது ஒரு கிராமத்து கதை எனவும், இந்த படத்தின் படப்பிடிப்பை வேகமாக நடத்தி முடித்துவிட வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

