Dailyhunt
அதிமுக 210 தொகுதிகளில் வெற்றிபெறும்!. எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை!...

அதிமுக 210 தொகுதிகளில் வெற்றிபெறும்!. எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை!...

Webdunia 5 days ago
ன்னதான் விஜய் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என தொடர்ந்து சொல்லி வந்தாலும், திமுகவுக்கு சரியான எதிரி என்பது அதிமுகதான்.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து திமுக ஆட்சி அமைத்து முக ஸ்டாலின் முதலமைச்சரானார்.

எனவே 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தான் முதல்வராக வேண்டுமான எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். இதையடுத்து பல நாட்களுக்கு முன்பே அவர் தமிழகத்தில் பிரச்சாரத்தை துவங்கிவிட்டார்.. இன்னலையில்தான் இன்று தான் போட்டியிடும் எடப்பாடி பகுதியில் பழனிச்சாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பின் செய்தியாளரிடம் அவர் பேசியபோது கூறியதாவது:

நடப்பது சட்டமன்றத் தேர்தல். இதில் ஏன் திமுக டெல்லியுடன் போட்டி போட வேண்டும்?..
திமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் திட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்படும். அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.. எங்கள் கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும்.. தேமுதிகவுக்கு 0.5 சதவீதம்தான் வாக்கு வாங்கி உள்ளது என சொன்னது உண்மைதான். கூட்டணி மாறியதால் தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படவில்லை..

ஆ.ராசா பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது.. அது இந்தியா முழுவதும் வைரலானது.. அதில் என்ன இருக்கிறதோ அவர் என்ன பேசினாரோ அதைத்தான் நான் சொன்னேன்.. கருணாநிதியை முக ஸ்டாலின் வீட்டு காவலில் வைத்திருந்தார் என்பதை நான் சொல்லவில்லை.. ஆர் ராசா சொல்லியிருந்தார்.. அதைத்தான் நான் குறிப்பிட்டு பேசினேன்.. அவரை கேட்காமல், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் என் மீது பாய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?' என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil