Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அது என்ன ரகசியமா?.. குடும்ப பிரச்சனையா?.. தவெகவை திட்டும் மார்க்சிஸ்ட் சண்முகம்!...

அது என்ன ரகசியமா?.. குடும்ப பிரச்சனையா?.. தவெகவை திட்டும் மார்க்சிஸ்ட் சண்முகம்!...

Webdunia 2 weeks ago
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சியமைக்க மேலும் 8 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்கிற நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன.
இதன் காரணமாக தவெக ஆட்சி அமைத்தது அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.. ஆனால் கடந்த சில நாட்களாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பே.சண்முகம் தவெக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

நேற்று திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பெ.சண்முகம் 'தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடி புதிய முதலீடுகள் வந்திருப்பதாக முதல்வர் விஜய் ஒரு விழாவை நடத்தினார்.. ஒரு லட்சம் கோடி முதலீடு வந்திருக்கிறது என்றால் அதன் மூலம் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கேட்டால் இன்று வரையிலும் பதில் சொல்லவில்லை..

அது என்ன ரகசியமா? இல்லையென்றால் அது உங்கள் குடும்ப பிரச்சினையா? ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உற்பத்தி எவ்வளவு அதிகரிக்கும் என்பதை தமிழ்நாடு அரசாங்கம் சொல்ல வேண்டுமா இல்லையா?.. ஆனால் அதில் வெளிப்படுத்தன்மையே இல்லை' எனக் கூறியிருக்கிறார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil