Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்னை பெண் பக்தர் வழங்கிய ரூ.4 கோடி செக்.. ரிட்டர்ன் ஆனதால் பரபரப்பு..

அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்னை பெண் பக்தர் வழங்கிய ரூ.4 கோடி செக்.. ரிட்டர்ன் ஆனதால் பரபரப்பு..

Webdunia 2 weeks ago

யோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடி நன்கொடை காசோலை வங்கியில் பணம் இல்லாததால் திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர், கோயில் ஊழியர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக இந்த காசோலையை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளைக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் காசோலை வங்கியில் செலுத்தப்பட்டபோது, சம்பந்தப்பட்ட கணக்கில் வெறும் ரூ.3 மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, போதிய பணம் இல்லாத கணக்கிலிருந்து இவ்வளவு பெரிய தொகைக்கான காசோலை வழங்கியது குறித்து விளக்கம் கேட்டு அந்த பெண்ணுக்கு வங்கி நோட்டீஸ் அனுப்ப தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், அந்த பக்தர் கோயிலுக்கு தனியாக ரூ.10,000 நன்கொடையும் வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

ரூ.4 கோடி தொகை கோயில் ஊழியர்களின் வசதிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என எழுத்துப்பூர்வ உறுதிமொழி வழங்க வேண்டும் என்றும் அவர் அறக்கட்டளையிடம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அத்தகைய உறுதி வழங்கப்படாததால், தற்போது இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

2020ஆம் ஆண்டு கோயில் கட்டுமானத்துக்காக நடத்தப்பட்ட நிதி சேகரிப்பு இயக்கத்தில் சுமார் ரூ.3,500 கோடி வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது பல காசோலைகள் திரும்பிய நிலையில், பெரும்பாலான தொகை பின்னர் மீட்கப்பட்டது.

தற்போது கோயிலுக்கு மாதந்தோறும் ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை நன்கொடைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அறக்கட்டளை இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடவில்லை.

Edited by Siva

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil