Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பட்ஜெட்டில் 10 % வசூல்தான் வந்திருக்கு!.. அர்ஜூன்தாஸுக்கு கை கொடுத்ததா ஒன்ஸ்மோர்?!..

பட்ஜெட்டில் 10 % வசூல்தான் வந்திருக்கு!.. அர்ஜூன்தாஸுக்கு கை கொடுத்ததா ஒன்ஸ்மோர்?!..

Webdunia 3 weeks ago
தொடக்கத்தில் நிறைய படங்களில் வில்லனாக நடித்து வந்த அர்ஜுன்தாஸ் ஒரு கட்டத்தில் படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.
அப்படி அவர் ஹீரோவாக நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் ஒன்ஸ்மோர். பல வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் நடித்து வெளியான ஒன்ஸ்மோர் படத்தின் தலைப்பை இந்த படத்திற்கு வைத்திருந்தனர். இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருந்தார். விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார்..

ஒரு பீல் குட் காதல் திரைப்படமாக ஒன்ஸ்மோர் திரைப்படம் உருவாகியிருப்பதாக பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தது. ஆனாலும் இந்த படத்திற்கு பெரிய வசூல் இல்லை.. படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் இதுவரை 1.26 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது..

இந்த படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 10 கோடி என சொல்லப்படும் நிலையில் பட்ஜெட்டில் 10 சதவீதத்தை மட்டுமே முதல் வாரத்தில் இந்த படம் வசூல் செய்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் இந்த படத்திற்கான வசூல் ரூ.30 முதல் 40 லட்சமாக மட்டுமே இருப்பதால்தான் இவ்வளவு குறைவான வசூல் என கணிக்கப்படுகிறது. அர்ஜூன் தாஸுக்கு ஒன்ஸ்மோர் படம் ஹிட் படமாக அமையுமா இல்லையா என்பது இந்த வார இறுதிக்குள் தெரிந்துவிடும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil