நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.. விஜயை எப்படியாவது ஒருமுறை அருகில் பார்க்க வேண்டும் என அவர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்..
விஜய் எப்போது எங்கு சென்றாலும் அவரை பார்க்க மக்கள் அதிக அளவில் கூடி விடுகிறார்கள்.. எனவேதான் சில விபத்துக்கள் நடந்துவிடுகிறது. தஞ்சாவூரில் கூட விஜயின் பிரச்சாரம் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது டூவீலரில் வந்த இளைஞர் கீழே விழுந்து விபத்தில் சிக்கி சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்து பின்னர் இறந்து போனார். திமுகவினர் இதை கையில் எடுத்து விஜயால் பலரும் இறந்து போகிறார்கள் எனத் தொடர்ந்து அவர் மீது பழி சுமத்தி வருகிறார்கள்..
இந்நிலையில்தன், இன்று வேட்புமனு செய்வதற்காகவும், பிரச்சாரம் செய்வதற்காகவும் விஜய் இன்று காலை திருச்சிக்கு சென்றார். அப்போது அவரின் வாகனம் சென்று கொண்டிருந்த அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரும், அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண்ணும் கீழே விழுந்துவிட்டனர்.
இதை பார்த்த விஜய் உடனடியாக வேலையிலிருந்து கீழே இறங்கி அருகில் சென்று அவர்களை விசாரித்தார். அவர்களுக்கு ஒன்றுமில்லை என்பதை உறுதி செய்துவிட்டு மீண்டும் பிரச்சார வாகனத்தில் ஏறி சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வாயிலாகி வருகிறது..

