Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பால் விலை உயர்கிறது!.. பொதுமக்கள் அதிர்ச்சி!.. முகவர்கள் கண்டனம்..

பால் விலை உயர்கிறது!.. பொதுமக்கள் அதிர்ச்சி!.. முகவர்கள் கண்டனம்..

Webdunia 4 days ago
னியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை தற்போது லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியிருக்கிறது.
பொதுமக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆரோக்யா பாலின் விலை ஜூலை 9ம் தேதியான நாளை முதல் அரை லிட்டருக்கு இரண்டு ரூபாயும், ஒரு லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல் அரை லிட்டர் ஆரோக்யா தயிரின் விலையும் ரூ.2 உயர்கிறது. ஆரோக்யா மட்டுமில்லாமல் பிற தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

பால் உற்பத்தி பாதிப்பு, தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது
. இது மகளிர்க்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. மேலும் முகவர்கள் முகவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil