Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பதவி கிடைக்கலன்னு ஃபீல் பண்ணாதீங்க.. அடுத்த எலக்சன் வருது!.. அமைச்சர் ஆனந்த்

பதவி கிடைக்கலன்னு ஃபீல் பண்ணாதீங்க.. அடுத்த எலக்சன் வருது!.. அமைச்சர் ஆனந்த்

Webdunia 1 week ago
மிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளன.
இதையடுத்து அதில் கம்யூனிஸ்ட் தவிர மற்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தமிழகத்தில் 60 வருடங்களுக்குப் பின் கூட்டணி ஆட்சி மலர்ந்திருக்கிறது.

அதேபோல், தவெகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன், அருண் ராஜ், சிடி நிர்மல்குமார் உள்ளிட்ட பலருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.


இந்நிலையில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தவெக அமைச்சர் என்.ஆனந்த் '32 வருடங்களாக தலைவர் சூப்பர் ஸ்டார் ஆவார், முதலமைச்சராவார் என எதிர்பார்த்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போஸ்டர் ஒட்டி உழைத்தவர்கள்தான் தற்போது எம்.எல்.ஏ-க்களாகவும், அமைச்சர்களாகவும் மாறியிருக்கிறார்கள். அப்படி உழைப்பவர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். பதவி கிடைக்குமோ கிடைக்கதோ என அவர்களுக்கு பயம் வேண்டாம். விரைவிலேயே உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது' என அவர் கூறியிருக்கிறார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Webdunia Tamil